மஹிந்த என்னை கொலை செய்திருப்பார் : சந்திரிக்கா

Published By: MD.Lucias

25 Oct, 2016 | 05:55 PM
image

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் முதலாவதாக என்னை கொலை செய்திருப்பார் என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது நாட்டு மக்களுக்கு கடந்த கால ஆட்சி வெறுத்திருந்தது. நாட்டை சூறையாடிக் கொண்டு, குடும்ப ஆட்சியை நடத்தி வந்த  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மக்கள் வெறுத்தமையே அதற்கு காரணமாகும். 

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் கதைப்பதற்கு பயந்தனர். ஒருவேளை என்னோடு எவராவது கதைத்தால் அடுத்த நாள் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்.

 எனது தொலைபேசி அழைப்புக்கள்  இரகசியமாக பதிவு செய்யப்பட்டன.

அன்றை ஆட்சிக் காலத்தில்  முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன. 

 தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. ராஜபக்ஷ சகல தமிழர்களையும் புலிகளாகவே  பார்த்தார். 

பேருவளையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி  தொடர்பாக நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லோரும் அதனை வாசிக்க வேண்டும். நடந்த உண்மை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஷவுக்கு இருந்தது மக்களின் பலம் அல்ல. பொலிஸ் உட்பட படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம்.  மற்றையது மோசடியாக சம்பாதித்த பண பலமாகும். 

ஆயினும் அவரை தோற்கடிப்பதற்கு நாங்கள் மக்கள் பலத்தை ஒன்று திரட்டினோம். நாட்டை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்தோம். 

மஹிந்த ராஜபக்ஷ அன்று வெற்றி பெற்றிருந்தால் என்னைத்தான் முதலில் கொலை செய்திருப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர்களில்  உயர்தர வகுப்பில் சித்தியடைந்தவர்கள்  50 சத வீதம் கூட கிடையாது. பட்டம் பெற்றவர்கள் 10 சத வீதம் கூட இல்லை. சிலர் தம்மை சட்டத் தரணிகளாக கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் சட்டம் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்லர். டிப்ளோமா பெற்றவர்களாவர்.

இன்று சுதந்தரம், மனித உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.  நாங்கள் மக்களுக்கு ஜனநாயக்தையும் சுதந்திரத்தையும்  வழங்கியுள்ளோம். ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04