ஊரடங்கு நேரத்தில் போதை பொருள் கடத்திய கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது 

Published By: Digital Desk 4

12 May, 2022 | 04:51 PM
image

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டி ஒன்றிலும் கார் ஒன்றிலும் ஜஸ் போதைப் பொருளை கடத்திச் சென்ற வெவ்வேறு சம்பவங்களில்  கணவன் மனைவி உட்பட 4 பேரை 8 அரை கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆரையம்பதி வைச்சந்தி 5ஆம் கட்டை  பொலிஸ் வீதிச்சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்தி அதில் பயணித்த 3 பேரை சோதனையிட்டனர். இதன் போது சாய்ந்தமருதைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரிடமிருந்து  இருந்து 1 கிராம் ஜஸ் போதைப் பொருளையும்; அவரது 17 வயதுடைய மனைவியிடம் இருந்து 5 கிராம் ஜஸ், அவர்களின் நண்பரிடமிருந்து ஒன்றரை கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து குறித்த 3 பேரையும் கைது செய்தனர்.

இதேவேளை பொலிசாருக்கு கிடைத்த இன்னொரு தகவலுக்கமைய கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு கார் ஒன்றில் ஜஸ் பேதை பொருளை கடத்திச் சென்றவரை காத்தான்குடி டிப்போ சந்தியில் மடக்கி பிடித்து சோதனையிட்ட போது அதில் பயணித்த ஒருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர் 

இந்த இருவேறு சம்பவங்களில் 4 பேரை கைது செய்ததுடன் 8 அரை கிராம் ஜஸ் போதைப் பொருளும், கார் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டபோது  அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10