பிரதமராகிறார் ரணில் ?

Published By: Digital Desk 4

12 May, 2022 | 01:52 PM
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

No description available.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரியுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (12) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகயை அடுத்து அரசியல் நெருக்கடி மேலோங்கிய நிலையில் பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டங்கள் எல்லை மீறிச் சென்ற நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் தலைதூக்கியதுடன் ஆளும் பொதுஜனபெரமுன முக்கியஸ்தர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்கமாறு எதிர்தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அநுர குமாரதிஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயார் என அறிவித்தன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பொறுப்பேற்பாராயின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சு.க. அறிவித்தது.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று உறுதிப்பட வலியுறுத்திய நிலையில் , அந்த கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் பலர் நிபந்தனைகளை விதிக்காது , ஆட்சியைப் பொறுப்பேற்கமாறு வலியுறுத்தினர்.

இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாத நிலையில் , கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டு பலர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அதே போன்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கடந்த செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் விலகப்போவதில்லை என்றும் ஆட்சியை பொறுப்பெடுக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாருமே புதிய அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வராத நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று ஆட்சியை பொறுப்பேற்குமாறு தெரிவித்தார்.

இதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் தொடர்பு கொண்டு இது குறித்து கலந்துரையாடிய நிலையில் புதன்கிழமை இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அந்த பொறுப்பை ஏற்க தயார் என்று உறுதியளித்துள்ளார்.

அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராக நியமிப்பதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) மாலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 5 தடவைகள் பிரதமராகவும், 1994 - 2001, 2004 - 2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது, 2021 ஜூன் 23 ஆம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவருகிறார்.

இந்நிலையில், ஆறாவது தடவையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04