கைபொம்மையாக வேண்டிய தேவை எதிர்க்கட்சி தலைவருக்கு கிடையாது - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 3

11 May, 2022 | 05:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை பொறுப்பேற்பார். நாட்டுக்கு தொல்லை கொடுக்காமல் ஜனாதிபதி சுயகௌவரத்துடன் பதவி விலக வேண்டும்.

பிரதமர் பதவி கைபொம்மை போன்றது, பாராளுமன்றத்திற்கு முறையான அதிகாரம் ஏதும் கிடையாது. ஆகவே கைபொம்மையாக வேண்டிய தேவை எதிர்க்கட்சி தலைவருக்கு கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறோடாவான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

சுயகௌரவம் என்பதொன்கு இருக்குமாயின் பதவி விலக வேண்டும். நாட்டை சீரழித்துள்ள பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்தவர்களும், ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் அமைதியானது. ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கவில்லை. 

அறிவார்ந்தவர்கள் கலந்துக்கொள்ளும் போராட்டத்தில் அலரிமாளிகையில் இருந்து வந்த பொதுஜன பெரமுன ஆதரவு குண்டர்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.தூக்கத்திலிருந்து விழித்ததை போன்று சட்டமாதிபர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுவிப்பு விடுதலை செய்யும் கொள்கையினை விட்டு இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பதவி விலகினால் அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சி தலைவர் தயாராகவுள்ளார். ஜனாதிபதிக்கு தேசிய மற்றும் சர்வதேசத்தில் அங்கிகாரம் கிடையாது என்பதை புதிதாக தெளிவுப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. தெளிவாக தெரிகிறது.

ஆளும் தரப்பின் அரசியல்வாதிகளின் சொத்துகளை சேதப்படுத்துவது கவலைக்குரியது.ஒழுக்கமான அரசியல்வாதிகளின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தவறானது. 

பிரதமர் பதவி ஒரு கைபொம்மை,பாராளுமன்றம் அதிகாரமிழந்துள்ளது.பொம்மையாக பதவி வகிக்க முடியாது. நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் தான் பதவி விலகுவேன் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை கையளிக்கும் போது வெளிநாட்டு கையிருப்பு 1900மில்லியன் அமெரிக்க டொலர் திறைச்சேரியில் இருந்தது.சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது.சுயகௌரவம் என்பதொன்று இருக்குமாயின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

பாராளுமன்றத்தை பிற்போட்டு ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையை பிற்போடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆளும் தரப்பினரது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத பாதுகாப்பு அமைச்சர் எதற்கு.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் தான் பாதுகாப்பு அமைச்சர்,முப்படைகளின் தளபதி.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்தவர்களும்,ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு வழங்கியவர்களும் பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முழு நாட்டையும் சீரழித்துள்ளது.பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து பாதிக்கப்பட்டவர்கள் தான் தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டாம் என குறிப்பிடுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04