கறைபடிந்த மே – 9

Published By: Digital Desk 5

14 May, 2022 | 11:41 AM
image

இவ்­வ­ரு­டத்தின் மே மாதம் 09ஆம் திகதி என்­பது இலங்­கையில்  ஒரு கறைப­டிந்த நாளா­கவும்  துயரம் நிறைந்த  தின­மா­கவும்   வர­லாற்றில்  பதி­வா­கி­யுள்­ளது. 

நாட்டில்  பல  பகு­தி­க­ளிலும் பாரி­ய­ள­வி­லான வன்­முறை  சம்­ப­வங்கள்  பதி­வா­கி­ய­துடன் கடும் பதற்ற நிலைமை நில­வி­யது.  இந்த வன்­முறைச்  சம்­ப­வங்­களில்   250 பேர் வரையில் காய­ம­டைந்­துள்­ளதுடன்    7 பேர் ­வரை  உயி­ரி­ழந்­துள்­ளனர் .

கோடிக்­க­ணக்­கான  சொத்­துக்கள்  தீயிட்டுக் கொளுத்­தப்­பட்­டுள்­ளன.  ஆளும் கட்­சியின்  20க்கும் மேற்­பட்ட  பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­கள் மற்றும்  பிர­தேச சபை  உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்­களின்  இல்­லங்கள்  தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன. 

Pro-Rajapaksa supporters attack peaceful Galle Face Green Sponsored  violence ensures black day for protesters - News Features | Daily Mirror

அத்­துடன் இந்த வன்­முறைச் சம்­பவங்­களில் ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்ஒருவரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்றார். 

நாட்டில் அவ­ச­ர­கால சட்டம், ஊர­டங்கு  சட்டம் என்­பன  அமுலில்  இருக்­கின்ற  நிலை­யி­லேயே  இவ்­வா­றான வன்­முறைச்  சம்­ப­வங்கள்  பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.

May be an image of skyscraper

வன்­முறை ரீதி­யான அணு­கு­முறை  எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும்  தீர்­வா­காது  என்­பது  தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்றபோதிலும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக  மே 9ஆம் திகதிமிகப் பாரி­ய­ள­வி­லான வன்­முறைச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. 

எந்தத் தரப்­பினர்  வன்­மு­றையில் ஈடு­பட்­டாலும் அது கண்­டிக்கத்­தக்கதா­கும்.   எனவே  இந்த வன்­முறைச்  சம்­ப­வங்­களின்  பின்­ன­ணியில்  இருக்­கின்­ற­வர்கள்   சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.  முக்­கி­ய­மாக  இதன் பின்னர்   எக்­கா­ரணம் கொண்டும்  இவ்­வா­றான வன்­முறைச்  சம்­ப­வங்கள்  நாட்டில்  ஏற்­ப­டு­வ­தற்கு  இட­ம­ளிக்­கக்­கூ­டாது. 

May be an image of 1 person and outdoors

நாட்டில்  அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் தட்­டுப்­பாடு, விலை உயர்வு, மின்­வெட்டு, எரி­பொ­ரு­ளுக்­கான  வரிசை  உள்­ளிட்ட பல்­வேறு சுமைகள் கார­ண­மா­கவே  மக்கள்  அர­சாங்­கத்­துக்கு  எதி­ராக  ஆர்ப்­பாட்­டங்­களை  நடத்தி வரு­கின்­றனர்.

மார்ச் 30ஆம் திகதி ஜனா­தி­ப­தியின்  மிரி­ஹானை இல்­லத்­திற்கு அருகில் ஆரம்­ப­மான மக்கள் போராட்டம் காலி­மு­கத்­திடல்,  அல­ரி­மா­ளிகை  வளாகம்  பாரா­ளு­மன்ற  சுற்­று­வட்டம்  என  பல பகு­தி­க­ளிலும்  முன்­னெ­டுக்­கப்­பட்டன. 

May be an image of 1 person and outdoors

காலி­மு­கத்­திடல் போராட்டம் கடந்த ஒரு மாத­கா­ல­மாக அசம்­பா­வி­தங்­க­ளின்றி அமை­தி­யானமுறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. 

அதா­வது அர­சாங்­கமும் ஜனா­தி­ப­தியும் பதவி வில­க­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தியே இந்தப் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. 

இந்த நிலையில் எதிர்க்­கட்­சி­யினர்  ஜனா­தி­ப­தியும்  அர­சாங்­கமும் பதவி வில­க­ வேண்டும்.  அதன் பின்னர் இடைக்­கால அர­சாங்­கத்தை  அமைக்­கலாம்  என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

May be an image of lake

பெளத்த பீடங்கள், சட்­டத்­த­ர­ணிகள் சங்கம்  என்­பன  புதிய  பிர­த­ம­ருடன்  சகல கட்­சி­க­ளையும்  கொண்ட இடைக்­கால  அர­சாங்கம்  அமை­ய­வேண்டும் என்­பதை  வலி­யு­றுத்தி வரு­கின்­றன. 

அர­சாங்­கத்திலிருந்து விலகி  சுயா­தீ­ன­மாக  செயற்­படும்  40 பேர் கொண்ட அணியும்   புதிய பிர­த­ம­ருடன்  இடைக்­கால அர­சாங்கம்  அமை­ய­வேண்டும்  என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றது. 

May be an image of 10 people, street, road and tree

இந்த நிலை­யி­லேயே  போராட்­டங்கள்  தொடர்ந்­து­ கொண்­டி­ருக்கின்றன. 

இந்தப் பின்­ன­ணியில் பிர­தமர் பதவி வில­க­வேண்டும் என்ற விடயம் ஆளும் கட்­சிக்­குள்­ளேயே  வலு­வ­டைந்­ததைத்  தொடர்ந்து ஜனா­தி­ப­தியும்  அந்தக் கோரிக்­கையை  விடுத்­தி­ருந்தார். 

அத­ன­டிப்­ப­டையில் கடந்த  திங்­கட்­கி­ழமை  மஹிந்த ராஜ­பக்ஷ் பதவி வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்தார்.  இதற்­கி­டையில் பொது­ஜன பெர­மு­னவின்   ஆத­ர­வா­ளர்கள்  நேற்று முன்­தினம்  அல­ரி­மா­ளி­கைக்கு  வருகை தந்து பிர­த­ம­ருக்கு  ஆத­ர­வாக  ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­துடன்    பிர­தமர்  பதவி விலகக்கூடாது என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். 

May be an image of 22 people, people standing, fire, outdoors and text that says 'Thilina Kaluthotage Photography POLICE'

அந்த ஆர்ப்­பாட்டம் மற்றும்  கூட்டம்  நிறை­வ­டைந்­ததன்  பின்னர்   வெளியே வந்த   பொது­ஜன பெர­முன ஆத­ர­வா­ளர்கள்   அல­ரி­மா­ளிகை வளா­கத்தில்   ஆர்ப்­பாட்­டத்தில்  ஈடு­பட்ட  மக்கள் மீது தாக்­குதல் நடத்­தினர்.

அதன் பின்னர்  காலி­மு­கத்­திடல் நோக்கிச் சென்ற அவர்கள் அங்கு  ஆர்ப்­பாட்­டத்தில்  ஈடு­பட்­ட­வர்கள்  மீது தாக்­குதல் நடத்­தினர். இத­னை­ய­டுத்து காலி­மு­கத்­திடல்  ஆர்ப்­பாட்ட  வளாகம் கல­வ­ர­பூ­மி­யாக   மாறி­ய­துடன்   கடும்  தாக்­கு­தல்கள்  இடம்­பெற்­றன.

ஒரு­கட்­டத்தில்   காலி­மு­கத்­திடல்  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள்   பொது­ஜன பெர­முன ஆத­ர­வாளர்­களை  விரட்ட ஆரம்­பித்­தனர்.  இத­னி­டையே  காலி­மு­கத்­திடல் போராட்டக் களத்துக்கு   மக்கள் விடு­தலை முன்­ன­ணியின்  தலைவர்   அநு­ர­கு­மார திஸா­நா­யக்க  வருகை தந்­தி­ருந்தார். 

எனினும் அதன் பின்னர்   அந்த இடத்­துக்கு  வந்த எதிர்க்­கட்சித்  தலைவர்  சஜித் பிரே­ம­தாச  மீது தாக்­குதல் நடத்த  முயற்­சிக்­கப்­பட்­டது.  இதனையடுத்து  அவர் பாது­காப்­பாக  வெளி­யேற்­றப்­பட்டார்.   

May be an image of 11 people and outdoors

இத­னை­ய­டுத்து பொது­ஜன  பெர­முன  ஆத­ர­வா­ளர்கள்  வருகை தந்த பஸ் வண்­டிகள், பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களின் வாக­னங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.   சில வாக­னங்கள்  கொழும்பு பேர­வா­விக்குள்  தள்­ளி­வி­டப்­பட்­டன. 

 இவ்­வாறு மிகப்­பெ­ரி­ய­தொரு  கல­வர நிலைமை   கொழும்பில்    ஏற்­பட்­டது.  மேலும்  அல­ரி­மா­ளி­கையில்  பிர­த­ம­ருக்கு  ஆத­ர­வாக  ஆர்ப்­பாட்­டத்தில்   பங்­கேற்­று­விட்டு  வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த  பொது­ஜன  பெர­மு­னவின் பொல­ன­றுவை  மாவட்ட   பாரா­ளு­மன்ற   உறுப்­பினர்  அம­ர­கீர்த்தி  அத்­துக்­கோ­றளை  நிட்­டம்­புவ  பகு­தியில்  சட­ல­மாக   மீட்­கப்­பட்டார் . 

ஒரு­வாறு  நேற்று முன்­தினம்  பிற்­பகல் ஆகும்­போது கொழும்பில்   நிலைமை  குறிப்­பி­டத்­தக்­க­ளவு  கட்­டுப்­பாட்­டுக்குள்  வந்­த­துடன்   காலிமுகத்­திடல்  ஆர்ப்­பாட்டம்   மீண்டும்  பழைய நிலை­மையில்  முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

எனினும் இரவு நேரத்தில்  அல­ரி­மா­ளிகை   முன்­பாக  ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­துடன்  ஒரு நுழை­வாயில்  உடைக்­கப்­பட்­ட­தா­கவும்   தெரி­விக்­கப்­பட்­டது.

இதனை அடுத்து  இரா­ணு­வத்­தினர்  ஆர்ப்­பாட்­டத்தை கலைக்க    வானத்தை நோக்கி துப்­பாக்கி பிர­யோகம்  செய்­தனர். அந்த சம்­ப­வத்தில் பலர் காய­ம­டைந்­த­துடன்  ஒரு பொலிஸ் அதி­காரி உயி­ரி­ழந்தார்.

அதேநேரம்  நேற்று முன்­தினம் இரவு நாட்டின் பல­ப­கு­தி­க­ளிலும்  பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  மற்றும்  உள்­ளூ­ராட்சி  பிர­தி­நி­தி­களின் வீடுகள்  தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. 

எம்.பி.க்களான  சனத்  நிசாந்த,  திஸ்ஸ குட்­டி­ய­ராச்சி,   ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ,   அனுஷ பெஸ்­குவல்,  பிர­சன்ன ரண­துங்க, ரமேஷ் பத்­தி­ரன, சாந்த  பண்­டார, அருந்­திக்க, கன­க­ஹேரத், காமினி லொகுகே , நிமல் லான்சா,  பந்­துல  குண­வர்த்­தன,  நாலக்­க­கொ­ட­கேவா, விமல் வீர­வன்ச, சிறி­பால கம்லத்,  கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல,  ரோகித்த அபே­கு­ண­வர்த்­தன,  காஞ்­சன விஜே­சே­கர, துமிந்த திஸா­நா­யக்க, அலி சப்ரி ரஹீம், எம்.எம். சந்­தி­ர­சேன, சன்­ன­ஜ­ய­சு­மன   ஆகி­யோரின் இல்­லங்கள்  தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன.

May be an image of 3 people and outdoors

அத்­துடன்  நீர்­கொ­ழும்­பி­லுள்ள  ஹோட்டல், வர்த்­தக நிலையம்,  வீர­கெட்­டி­ய மெத­மு­லனவிலுள்ள  ராஜபக் ஷவினரின்பூர்வீக  வீடு,  குரு­நாகல்  மேயர் இல்லம்,   மொறட்­டுவை மேயர் இல்லம்  என்­ப­னவும் தீக்­கி­ரை­யாக்­கப்பட்டன.  டி.ஏ. ராஜபக் ஷவின் நினைவு தூபியும்  இடிக்கப்பட்டது. 

ஒரு சில பிர­தே­சங்­களில் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்­களும்  பதி­வா­கின. அத்­துடன்  உயி­ரி­ழப்­புக்­களும்  பதி­வா­கின.

அந்த வகையில் தற்­போது இந்த  காலி­மு­கத்­திடல்  ஆர்ப்­பாட்­டத்தின் மீது   தாக்­குதல் நடத்த  வந்­ததன்  கார­ண­மா­கவே இந்த வன்­மு­றைகள்  தோற்றம் பெற்­ற­தாக  கூறப்­ப­டு­வ­துடன் , இவர்கள்  கைது செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. 

அமெ­ரிக்கா, பிரிட்டன்,  ஐக்­கி­ய­நா­டுகள்   உள்­ளிட்ட சர்­வ­தேச  சமூ­கமும்  இது தொ டர்பில்  கவனம்  செலுத்­தி­யி­ருக்­கின்­றன. 

May be an image of 4 people and outdoors

மிகவும் ஒரு மோச­மான  வன்­முறை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றமை   நாட்­டுக்கு  மிக பாரிய பின்­ன­டைவை  ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்த நிலையில்  ஜனா­தி­பதி  கோட்­டா­பய ராஜ­பக்்ஷ தற்­போது நெருக்­கடி  நிலைமை தொடர்­பாக  ஆராய்ந்து   புதிய சர்­வ­கட்சி   அர­சாங்கம்  தொடர்­பாக தீர்­மா­னிக்க  சகல கட்­சி­க­ளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். 

  மேலும்  சபா­நா­ய­கரும்  உட­ன­டி­யாக  பாரா­ளு­மன்­றத்தை  கூட்ட  வேண்டும் என்று    ஜனா­தி­ப­தி­யிடம்  கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார். 

அந்­த­வ­கையில் எந்­த­வொரு கட்­டத்­திலும்  வன்­மு­றை­களைக் கொண்டு பிரச்­சி­னை­க­ளுக்கு   தீர்­வு­காண முடி­யாது.  யார் வன்­மு­றையில்   ஈடு­பட்­டாலும் அது நாட்­டுக்கும்   மக்­க­ளுக்கும்  அழி­வையே கொண்­டு­வரும். 

May be an image of 3 people, people standing, fire and outdoors

எனவே எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­கவும்  எந்­த­வொரு தரப்­பி­னரும்  வன்முறையை  கையில் எடுக்கக்கூடாது. யாரும்  வன்முறைகளை  கையில் எடுக்கவேண்டாம் என   காலி முகத்திடலில்  ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற  இளைஞர், யுவதிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

இதுபோன்ற  வன்முறைகள் நாட்டுக்கு ஒருபோதும்   நன்மையை தராது என்பதுடன் அவை  மேலும்  நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அதற்கு எந்தவொரு தரப்பினரும் இடமளிக்கக்கூடாது. 

May be an image of 4 people and outdoors

இதேவேளை தற்போது  புதிய பிரதமர்  யார் என்பது தொடர்பான கலந்துரையாடல்களும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல அரசியல்  தலைவர்களின்  பெயர்கள்  தற்போது அலசி ஆராயப்படுகின்றன.

கரு ஜயசூரிய,  ரணில் விக்கிரமசிங்க,  சஜித் பிரேமதாச,  சம்பிக்க   ரணவக்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா  குமாரதுங்க,  டலஸ் அழகபெரும  உள்ளிட்ட  பலரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் கருஜயசூரியவுக்கே   பிரதான எதிர்க்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு  இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.   

அடுத்து வரும்  மணித்தியாலங்கள்  தற்போதைய  அரசியல் சூழலில் மிகத் தீர்க்கமானதாக  இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13