இக்கட்டான இச்சூழ்நிலையில் நிதானமாக செயற்படுங்கள் - பொதுமக்களிடம் சஜித் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

11 May, 2022 | 10:00 AM
image

(நா.தனுஜா)

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும். குறிப்பாக வன்முறைகளால் நாடு அழிவையே சந்திக்கும் என்பதை மக்கள் மனதிலிருத்திக்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மக்களை அமைதிகாக்குமாறு வலியுறுத்தி வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரால் அமைதிவழிப்போராட்டக்காரர்கள்மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.

அதேவேளை வன்முறைகளால் நாடு அழிவையே சந்திக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். கடந்த பல தசாப்த காலங்களாக நாடு இத்தகைய அழிவையே எதிர்கொண்டு வந்தது என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.

எனவே தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டியது அவசியமாகும். 

அதேவேளை ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ஷ குழுவினர் ஒருபோதும் தப்பிக்கமுடியாது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14