ஐ.பி.எல். பிளே ஓவ் சுற்றில் விளையாட முதல் அணியாக தகுதி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்

Published By: Digital Desk 5

11 May, 2022 | 10:27 AM
image

(என்.வீ.ஏ.)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போட்டியில் 62 ஓட்டங்களால் வெற்றியீட்டிய குஜராத் டைட்டன்ஸ், முதலாவது அணியாக ஐபிஎல் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

Wriddhiman Saha pulled off back-to-back stumpings - this one of Ayush Badoni off R Sai Kishore, Gujarat Titans vs Lucknow Super Giants, IPL 2022, Pune, May 10, 2022

ஷுப்மான் கில் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதமும் ராஷித் கானின் 4 விக்கெட் குவியலும் குஜராத்தின் வெற்றியை உறுதிசெய்தன.

துடுப்பாட்டக்காரர்கள் சிரமத்தை எதிர்கொண்ட அப் போட்டியில் 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 13.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழநது 82 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லக்னோ சார்பாக மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் 11ஆம் இலக்க வீரர் ஆவேஷ் கான் 2ஆவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக 12 ஓட்டங்களைப் பெற்றார்.

Mohammed Shami picked up the big wicket of KL Rahul, Gujarat Titans vs Lucknow Super Giants, IPL 2022, Pune, May 10, 2022

முன்வரிசையில் தீப்பக் ஹூடா 27 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

குஜராத் பந்துவீச்சில் ராஷித் கான் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாஷ் தயாள் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

Hardik Pandya and KL Rahul, old friends and new rivals, ca tch up before the game, Gujarat Titans vs Lucknow Super Giants, IPL 2022, Pune, May 10, 2022

ரிதிமான் சஹா (5), மெத்யூ வேட் (10), அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (11) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை  9.1 ஓவர்களில்   51 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், எஞ்சிய 65 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.

ஷுப்மான் கில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்ளைப் பெற்றார்.

குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸை அடித்த டேவிட் மில்லர் 26 ஓட்டங்களையும் ராகுல் தெவாட்டியா ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

4ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் 52  ஓட்டங்களைப் பகிர்ந்த கில், பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் மேலும் 41 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பந்துவீச்சில் ஆவேஷ் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41