ரத்கம, அங்கொடையில்  இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் 

Published By: Digital Desk 4

10 May, 2022 | 09:54 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி - ரத்கம பகுதியிலும்,  அங்கொடை பகுதியிலும் இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இன்று ( 10) மாலை பதிவாகின.  இதன்போது 5 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அறிய முடிகிறது.

 ரத்கம துப்பாக்கிச் சூடு அந்த பிரதேச சபை தலைவரினாலும், அங்கொடை துப்பாக்கிச் சூடு  முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 ரத்கம 

 ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டின் முன்னால் இன்று மாலை   அப்பகுதி மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ளனர். இதன்போது  பிரதேச சபை தலைவர் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்ததாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

 துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அங்கொடை 

முல்லேரியா, அங்கொடை சந்தியில்   இன்று மாலை  முல்லேரியா பொலிஸ் பொறுப்பதிகாரி  பயணி ஜீப் வண்டி மீது  தாக்குதல் நடாத்தி தீ வைக்க முயன்றவர்கள் மீது  முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 அம்பதலே எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே  நேற்று (9) தாக்குதல் நடாத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள பஸ் வண்டி ஒன்றினை  இராணுவத்தினர் பாதையிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  அதன் போது பிரதேச மக்கள் அந்த பஸ் வண்டியை பெற்றோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

 இது தொடர்பில் இராணுவத்தினர் முல்லேரிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

 இதனையடுத்து முல்லேரிய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  சுனிமல் சுசந்த உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்ற போது , அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து  தாக்குதல் நடாத்தி  ஜீப் வண்டிக்கு தீ வைக்க தயாரான போது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43