சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர் கூட்டம்

Published By: Digital Desk 4

10 May, 2022 | 10:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தற்போதைய ஸ்தீரமற்ற நிலைமைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.பாராளுமன்றத்தை கூட்டி அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீர்க்கமான தீர்மானங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமர்று சபாநாயகர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு தீர்வு காணும் பொருட்டு நாளை  பிற்பகல் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.

காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்பாட்ட களத்தில் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்த மிலேட்சத்தனதான தாக்குதலை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.

 உத்தேச இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபி;ப்பது குறித்து அவதானம் செலுத்தி அரசியலமைப்பிற்கமைய அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

நாட்டில் தற்போது அரசியல் ஸ்தீரமற்ற தன்மை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பதொன்று கிடையாது.இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றில் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

நாட்டில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதை தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டி விரைவாக தீர்வு காண்பதற்கும்,அரசியல் ரீதியில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து  உரிய தீர்மானத்தை மேற்கொள்ளவும் பாராளுமன்றத்தை கூட்டுமாறும்,பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ஸ்தீரமற்ற தன்மை தொடர்பிலும்,முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50