சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் : மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முப்படையினர் கடமையில் -இராணுவ தளபதி

09 May, 2022 | 10:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் பொது மக்கள் ஒருவருக்குகொருவர் முரண்பட்டுக்கொள்வதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 

பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு சகல தரப்பினருக்கும் உரிமையுண்டு.

அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டத்தில் ஈடுப்படலாம் என இராணுவ தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை(9) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்கள் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதி வழி போராட்டத்திற்கு மாத்திரம் குறைந்தப்பட்ச அளவில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர். பொலிஸார் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள்.

இரு தரப்பினருக்கு இடையிலான போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இன்று நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதை தொடர்ந்தே முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் உரிமை சகல தரப்பினருக்கும் உண்டு. ஒருவரது உரிமை பிறருக்கு இடையூறை ஏற்படுத்தும் போது அது பாதிப்பை ஏற்படுத்தும்.தற்போதைய நிலைமையில் நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொள்வதால் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.பிரச்சினைகள் மென்மேலும் தீவிரமடையும்.

பொது மக்கள் அரச சொத்துகளுக்கும் ,தனியார் சொத்துக்களுக்கும் பொது மக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுப்படலாம்.இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சேவையில் ஈடுப்படுவார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30