அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் இரத்த தானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் ரத்த தானம் செய்ய ஆயுள்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. தங்களுக்கும் ரத்த தானம் வழங்கும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக பல மாகாணங்கள் ஓரின சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்து சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

அதை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. எனவே, ஓரின சேர்க்கையாளர்கள் இரத்த தானம் வழங்கும் உரிமையை வழங்க அமெரிக்க உணவு மற்றும் சத்துணவுத்துறை நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில் அவர்கள் ரத்ததானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.