- ஜீவா சதா­சி­வ­ம்

“முன்னாள் ஜனா­தி­பதி சந்­திரி­காவுக்­கும்   இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் தமி­ழ் ­மக்­களை பாது­காக்க வேண்­டிய தலை­யாய பொறுப்பு இருக்­கின்­றது'' என்று தனது உள­மார்ந்த கருத்தை நேர்­காணல் ஒன்றில் கூறி­யுள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரா­ஜ­­பக் ஷ ஆட்­சியில் ஒரு 'இரா­ஜா­வாக' இருந்த பஷில் ரா­ஜபக் ஷ.  இதற்கான கார­ணத்­தையும் அவர் இவ்­வாறு  கூறியி­ருக்­கின்றார்.  

''மேற்­படி ஜனா­தி­ப­தி­க­ளுக்கு மாத்­திரம் தான் சிறு­பான்­மை­யினர் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்கள் நம்­பிக்­கையின் அடிப்­படையில் வாக்­கு­களை வழங்­கி அவர்­களை ஆட்­சிக்கு வர­வேற்­றுள்­ள­னர்” என்று இதற்­கான கார­ணத்­தையும் குறிப்­பிட்­டுள்­ளார். 

மறு­பு­ற­மாக ஜே.வி.பி யின் தலைவர் அனு­ர­குமார  இப்­படி கூறு­கிறார். “நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்சி காலம் முடிந்து விட்­டது. ஜன­வரி 8ஆம் திகதி ஏற்­பட்ட புரட்சி போன்று மறு­ப­டியும் ஒரு புரட்சி ஏற்­ப­டு­வ­தற்­கான சூழ்நி­லை­களே தற்­போது உரு­­வாகிக் கொண்டி­ருக்­கின்­றது” என்று பெரும் ஆவே­சத்­து­டன் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் அண்­மைய உரை பெரும்­பான்மையின மக்­கள் மத்­தியில் பெரும் சல­ச­லப்­பையும் சிறு­பான்­மை­யினர் மத்­தியில் ஒரு கேள்­வி­யுடன் கொழும்பு அர­சி­யலில் ஒரு குழப்­ப­மான சூழ்­நி­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் ... 

கடந்த வியா­ழ­க்­­கி­ழமை இர­வு யாழில் மாண­வர்கள் இரு­வரின் இக்­கொலை சம்­ப­வம்...!

முன்­னாள் அமைச்சர் பஷில் மற்றும் அனுரகுமார எம்.பி ஆகிய இரு­வரும் கூறி­யுள்ள மேற்­படி இரு கருத்­துக்­களும் அர­சியல் சார்ந்தவையாக  இருக்­கின்­றன என்­றாலும் இவை­யி­ரண்டும் இக்­கட்­டு­ரை­க்கு மிகவும் முக்­கி­ய­மானதாக அமைந்­துள்­ளது. 

ஆம்­!   யுத்­தத்­தின் பின்னர் இலங்கையில் உள்ள குறிப்­பாக வடக்கு, கிழக்கு தமி­ழர்­களின் நிலை­மையை இந்த நல்­லாட்சி அர­சாங்­கம் ஆட்­சிக்கு வந்­த பின்னர் எவ்­வாறு கையா­ளுகின்­றது? அவ்­வாறு கையா­­ளப்­ப­டுவ­து இவர்­க­ளுக்கு  திருப்தியளிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றதா? இதனை எம்­மக்கள் விரும்பி இருக்­கின்­றார்­களா? அல்­லது இப்போதும் எல்லா விட­யங்­க­ளுக்கும் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள நிலை­யி­லேயே இருக்­கின்­றார்­க­ளா? போன்ற சில கேள்­வி­க­ளையே என்னுள் நான் கேட்டுக்­கொள்­கின்றேன்.  

ஆம்! ''பிர­பா­க­ரனை கொன்றால் தமிழ் மக்கள் தலை­நி­மிர்ந்து வாழலாம், அவரை ஒழித்து அழித்­து­விட்டால் தமி­ழர்­க­ளுக்­கான அனைத்து பிரச்­சி­னை­க­ளும் தீர்ந்து விடும். இவரின் அழிவின் இனப்­பி­ரச்­சினையோ மொழிப்­பி­ரச்­சி­னையோ இருக்­கா­து. சமா­தானம் ஏற்­பட்டுவிடும்'' போன்ற பல கருத்­துக்­க­ளுடன்  பெரும்­பான்மை அர­சாங்கம் சிறு­பான்மை மக்­களின் நலனில் பெரும் அக்­கறை கொண்­ட­தாக இருக்கும் என்ற நம்­பிக்­கையை சில இன­வா­த சக்­திகள் மனதில் இரு­த்திக் கொண்டு அதன்­ப­டியே செயற்­பட்டு இன்­றைக்கு சுமார் ஏழு வரு­டங்கள் கடந்­து­விட்­ட­ன­.

இந்த ஏழு வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சரி­யான தீர்­வுகள் கிட்­டப்­பட்டு விட்­ட­தா? இல்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான அபி­வி­ருத்தி அர­சியல் படிப்­ப­டி­யாக அபிவிருத்­தி­ய­டை­ந்து வரு­கின்­றதே தவிர அவர்­களின் உரிமை மற்றும் அர­சியல் சார் பிரச்­சி­னை­க­ளுக்­கான  தீர்வு என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்கின்­றது. 

ஆட்சி மாற்றத்தின் ஊடாக ஒரு 'அர­சியல்புரட்­­சி'யை ஏற்­ப­டுத்த வேண்­டும், நாமும் சுதந்­தி­ர­மான காற்றை சுவா­சிக்க வேண்டும் என்ற ஆவ­லில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை தெரி­வு­ செய்­வதில் வடக்கு, கிழக்கு மக்­களின் பங்கு முழு­மை­யா­ன­தாக இருந்­தது என்று கூற­வேண்டும். இங்கு நான் மலை­ய­கத்தை புறக்­க­ணிக்க வில்லை. மலை­ய­கமும் இதில் சாரும். இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பின்னர் வடக்கில் காயப்­பட்­டி­ருந்த மக்களுக்கு ஆறு­தல் அ­ளிக்கும் நோக்கில் வடக்கை நோக்கி முன்­னாள், இந்நாள் ஜனா­தி­ப­திகள் விரைந்­தனர் இப்­போதும் விரைந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டனரா?

 நீண்டகால  அர­சியல் மாற்­றத்தின் பின்னர் உரு­வான நல்­லாட்­சியில் நிம்­மதி­யாக வாழலாம் என அம்­மக்கள்  நினைத்­தி­ருந்­தாலும் அன்­றாடம் அங்கு சில அரச மற்றும் அரசசார்­பற்­ற­வர்­களால் இடம்­பெறும் விட­யங்களைப் பார்க்கும் போது  அவை யாவும் 'நெஞ்சை பிள­க்­கும்' செய­லா­கவே இருக்­கின்­றது. இனம், மதம், சாதி, மொழி என்­பன வேறாக இருப்­பினும் ஒவ்­வொரு மனி­த­னு­க்குள் இருக்கும் 'உயிர்' என்­பது பொது­வானதொன்று. உயிரை துச்­ச­மாக நினைத்து நடத்­தப்­படும் சம்­பவங்­களே கடந்த பல மாதங்­­க­ளாக வடக்கு, கிழக்­கில் இடம்­பெற்று வரு­கின்­றன.  அவ்­வாறு இடம்­பெற்ற சம்­ப­வங்­களில் மிகவும் பார­தூ­ர­மான சம்­ப­வ­மாக இரு மாண­வர்களின் கொலைச் சம்­பவம் யாழில் மாத்­திரம் அல்ல நாட­ளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைளை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  

ஆம்!.கடந்­த ­வாரம் யாழ். கொக்­குவில் பகு­தியில் இரு மாண­வர்­களின் 'படு­கொலை' சம்­பவம் யாழை மாத்­திரம் அல்ல நாட­ளா­விய ரீதியில், இன­வா­தி­யல்லாத  பெரு­ம்­பான்மையின மக்கள் மத்­தி­­யிலும் பெரும் பர­ப­ரப்­பை­யும் அதிர்ச்­சி­யையும் அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­ற­து. 

பாட­சா­லை­க­ளுக்கோ அல்­லது பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கோ கல்வியைத் தொடர்­வ­த­ற்­காக தமது பிள்­ளை­களை அனுப்பும் பெற்­றோருக்கும் பெரும் அச்­சத்தை இச்­சம்­பவம் ஏற்­ப­டு­த்­தி­யுள்­ளது. அது மாத்­தி­ரமா? நல்­லாட்­சியின் மேல் ஒரு சந்­தே­கத்­தையும் உரு­வா­க்­கி­யுள்­ளது. 

இப்­போ­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கம் கடந்த 'தேர்தல் புரட்­சியின்' பின்­னர்  சிறு­பான்மையின மக்கள் மனதை குறிப்பா­க வடக்கு, கிழக்கு  மக்­களின் மனதை வெற்­றி ­கொ­ள்­வ­தற்­காக  அபி­வி­ருத்தித் திட்­டங்கள் உட்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­ நி­ரல்­க­ளை செயற்­ப­டுத்தி வந்­தது; வரு­­கின்­ற­து. ஆனால், அவை உதட்­ட­ளவில் இருக்­கின்­றதே தவி­ர, உ­ள ரீதியான, உணர்­வு­பூர்­வ­மான  மாற்­றங்கள்  எதுவும் இல்லை என்­பதை யாழில் நடக்கும் 'நாளாந்த சம்பவங்­கள் ' உணர்­த்­து­கின்றன.    மாண­வர்­கள் சுட்­டுக்­கொல்லப்­பட்ட சம்­பவம் மூலம் இது தெட்டத்தெளிவாக புலப்­பட்டு விட்­டது. 

சிறு­பான்மை இனத்­த­வர்கள் அடிமைகள் அல்ல என்ற பெரும்­பான்மையான மனோ­நிலை முதலில் 'அரச ஊழி­யர்­கள், அதி­கா­ரி­க­ளி­டம்' ஏற்­ப­டாத வரையில் சிறு­பான்மை மனதை வெல்லும் எந்­த­வொரு சாத­க­மா­ன திட்­டங்­களும் சாத்­தி­­யப்­ப­டா­த­தா­கவே இருந்து விடும். பொதுவாக எமது சிறு­­பான்மை இனத்­த­வ­ரிடம் பெரும்­பான்மை அரச அதி­கா­ரிகள் / ஊழி­யர்­களின்  மனோ­­நிலை ஒரு போக்­காகவே இருக்­கின்­றது. இது நாம் கண்ட அனு­பவம். 'ஒருவர் என்­னதான் குற்றம் செய்­தி­ருந்­தாலும் மரண தண்­ட­னை தெருவில் நிறை­வேற்றும் அதி­காரம் பொலிஸா­ருக்கு இருக்­கு­மானால் இந்­நாட்டில்   நீதி­­மன்­­றங்­க­ள் தேவைப்­ப­டா­து. 

எந்த இன­மாயினும் உயி­ரி­ழந்த இந்த மாண­வர்கள் இரு­வரும் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என்­பதை யாரும் மறந்து விட முடி­யாது.   யுத்­தத்தின் பிடியில் கடந்த பல வரு­டங்­க­ளாக பெரும் அவ­திப்­பட்டு அதில் சிக்­குண்டு உற­வு­­களை இழந்து நிர்க்­க­தி­யாக அதனால் ஏற்­பட்ட 'வலியின் சுமை­' களை இன்றும் தாங்கிக் கொண்­டி­ருக்கும் அந்த தாய்க்கே தன்னுடைய மக­னை இழந்த வலி தெரி­யும். தெருவில் போகும் நாய்க்கு  கொடு­க்கும் மரி­யா­தையை கூட இந்த சிறு­பான்­மை­யின மக்க­ளுக்கு  கொடு­க்க முடி­யாத மோச­மான கலா­சாரம் தற்­போது உரு­வா­கி­யி­­ருப்பது  பெரும் வேத­னை­யான விட­ய­மே.  

எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருந்த இரு மாணவர்களின் உயிர் இடை நடுவில் கொடூரமாகப் பறிக்கப்பட்டி­ருக்கின்றது. அவர்களை நம்பியிருந்த குடும்பங்களும், உறவுகளும் சோகக் கடலில் மூழ்கியுள்ளன. அவர்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பு. சிறு­பான்மையினர் போரின் போது இடம்­பெற்ற சம்­பவங்­களின் வலியில் இருந்­தாலும் பெரும்­­பான்­மை­யி­னத்­த­வர்கள் மீதான குரோத மனப்­பான்மை இல்­லா­தி­ருந்­த­போ­திலும் போர்க்கால மனோ நிலையிலும், ஆதிக்க மனப்போக்கிலும் தான் இன்னும் பெரும்பாலான பெரும்­­­பான்­மை­யினர் இருக்­கின்­றார்கள் என்பதை இச்­சம்­பவம் பகி­ரங்­கப்­ப­டு­தி­யுள்­ளது. 

இச்­சம்­ப­வத்துடன் தொடர்புபட்ட  குற்­ற­வா­­ளி­­­­­க­ளுக்கு நீதித்­துறை மரண தண்டனை  கொடுத்­தாலும் அந்­தப்­ பிள்­ளை­களை பெற்ற தாய்க்கு இதனால், ஏற்­பட்ட 'ரணங்கள்' என்றும் ஆறப்­போ­வ­தில்லை. அதற்கு  இலங்கையின் நீதித்­துறையினால் எவ்­வா­றான தீர்ப்பை வழங்க முடி­யும்? கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாட­ளா­விய ரீதியில் இருந்து யாழ். பல்கலைக்கழ­கத்திற்கு வந்­த­வர்­களும் பெரும் அச்­சத்­தி­லேயே இருக்­கின்­றனர். பல்­க­லையே ஸ்தம்­பிதம் அடைந்­துள்ளது.  சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அத்துமீறி நடந்திருப்பது இது முதல் தட­வை­யல்ல என்­ப­தை­யும் இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட வேண்டும். 

அவ்­வப்­போது அமை­தி­யை சீர்­குலைக்கும் நிகழ்வுகள், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் கட்­டிக்­காக்கும் பொலி­ஸா­ரினால் இடம்­பெற்ற வண்ணம் இருக்­கின்­றது என்­பது மறுப்­ப­தற்­கில்லை. யாழில். கடந்த ஓரிரு வாரங்­க­ளா­க தொடரும் வாள்­வெட்டு சம்­ப­வங்களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அது தொடர்­பில்,  பொறுப்­பா­ன­வர்கள் இது­வ­ரையில் எவ்வி­த முழு­மை­யான நட­வடிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் தொடர்ந்­த வண்ணம் இருக்­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே இந்­த மாண­வர்­க­ளின் கொலைச்சம்­பவம் இடம்­பெற்­றுள்ளது. 

அமைதியையும், ஒழுங்கையும் நிலை­நாட்டு­­வதற்காக அனுப்பப்படும் பொலிஸார் தெருவில், குற்றம் செய்யும் ஒரு­வ­ருக்கு தண்­டனை வழங்கும் அதி­காரம் இல்லை. பொலிஸார் சுய­மாக அதி­கா­ர­த்தை தங்கள் கையில் எடுத்­துக்­கொண்டால் இங்கு நீதித்­து­றை அவ­சியம் இல்­லை. மாணவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்­கப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்ட மாணவனின் மார்பி­­லேயே துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்துச் சென்றிருப்பதை சட்ட மருத்துவ பரிசோதனையின் போது தெரிந்துகொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவர்கள் தப்பிச் செல்வ தற்கு முற்பட்டபோதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்குமாயின் மார்பிலல்ல முதுகிலேயே துப்பாக்கிச் சன்னம் துளைத்துச் சென்றிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனால், இச்சம்­பவம்  தொடர்பில் பல சந்தேகங்கள் எழுந்­துள்­ளன. 

மாணவர்களின் மரணத்தையடுத்து கொந்தளிப்பான நிலைமையே தற்­போது யாழில் உரு­வா­கி­யுள்­­ளது.    மாணவர்கள் அமைதியிழந்திருக்கின்றார்கள்.   பொலி­ஸாரின் இவ்­வா­றான அத்துமீறிய செயற்­பாடு­கள்  இடம்­பெ­றா­வண்ணம் அர­சு உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­ப­துடன் யாழ்.மக்­க­ளுக்கு உரிய பாது­­காப்­­பையும் வழங்­க­வேண்­டிய கட­மையும் இருக்­கின்­றது. 

திரு­கோ­ண­ம­லையில் 2006ஆம் ஆண்டு இடம்­­பெற்ற ஐந்து மாண­வர்கள்  சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட சம்­ப­வமே இப்­போது நினை­வுக்கு வரு­கின்­றது.  இன்­றைக்கு சுமார் 11 வரு­டங்கள் கடந்தும் இதற்கு என்ன தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.  மாண­வச் செல்­வங்­களை  சுட்­டுக்­கொல்லும் கலா­சாரம் எமது நாட்டில் தான் காணப்­ப­டு­­கின்­­ற­து. மாண­வர்­க­ளுக்கு பாது­காப்­பு இல்லாத இடமாக எமது நாடு இருக்­கின்றதா என எண்ணத் தோன்று­கி­றது.  

இந்­நி­லையில் ஜாதி­க ஹெல உறு­மய வின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சிறி வர்­ண­­சிங்க  கடந்த சனிக்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது வழங்­கிய கருத்து பெரும் நகைச்­சு­­வை­யாக இருக்­கின்­றது. 

'யாழ். மாண­வர்கள் வீதி விதி­மு­றை­களை மீறி­ய­மை­யி­னா­லேயே இந்த துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கின்­ற­து. சட்­ட­த்­தையும் ஒழுங்­கையும் பாது­காக்கும் கடப்­பாடு பொலி­ஸா­ருக்கு இருக்­கின்­றது  என்று கூறி­­யி­ருக்கும் கரு­த்து பெரும் நகைச்­சு­வை­யாகவே இருக்­கின்­றது. உல­கி­லேயே வீதி ஒழுங்குமுறை­க­ளை மீறும் நாடு­களின் பட்­டி­யலில் இலங்­கையும் இருக்­கின்­றது.  மேற்படி எம்.பி கூறி­ய­படி வீதி விதி­களை மீறு­ப­வர்கள் மீது துப்­பாக்கிச்சூடு நடத்­தப்­படு­மாயின் நாளாந்தம் நிமி­டத்­துக்கு நிமிடம் கொழும்பு  நகரில் ஆங்­காங்கே சன்­னங்கள் பாயும் நிலை­மையே காணப்­படும். ஆயி­­ரக்­க­ண­க்கா­ன­வர்­களின் தலை­வி­தியை தீர்­மா­னிக்கும் நிலைமை பொலி­ஸா­ருக்கே இருந்­தி­ருக்­கும். கொழும்­புக்கு ஒரு சட்டம்; ஏனைய பகு­தி­க­ளுக்கு வேறு சட்டம் என்று சட்­டத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை அல்லவா?

சட்டம்,  ஒழுங்­கை பாது­கா­க்கும் அதி­காரம் ­பொலி­ஸா­ருக்கு இருக்­கின்­றதே தவிர அதனை  தன்னிச்­சை­யாக செயற்­ப­டுத்தவோ அல்­லது குழப்பம் ஏற்­படும் வகையில் நடந்து ­கொள்­வ­தற்­கான அதி­காரம் இல்லை. குறிப்­பாக சிறு­பான்மை இனத்­தவரை இலக்கு வைத்து நடத்­தப்­படும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இனியும் இடம்­பெ­றாத வகை­யில் நல்­லாட்சி அர­சாங்கம் இனம், மொழி பாராது உரிய நட­வடிக்கை  எடுக்கும் என்­பது எமது எதிர்ப்­பார்­ப்பு. 

இதற்கு எமது அமைச்­சர்கள்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்­நாட்டின் உய­ரிய சபை என்று சொல்லப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்­றத்தில் உரிய விவா­தங்­களை முன்­வைத்து இவ்­வா­றான அச்­ச­மான சூழலில் இருந்து சிறு­­பான்­மை­யி­னரை பாது­காக்க வேண்­டிய கடப்பாடு அவர்­களையே சார்ந்­தி­ருக்­கின்­றது. 

யுத்தம்  நடந்து  முடிந்­தி­ருக்­கின்ற இப்­பூ­மியில் மீண்டும் இயக்­கங்கள் உரு­வா­கலாம் என்று பெரும்­பான்­மை  தரப்பில் அச்சமான சூழ்­நிலை  இருக்­கின்ற நிலையில், அதற்கேற்­ற வகையில் சந்தேக்துடன் நாம் நடந்­து­கொள்­வதை தவிர்ப்­பது சிறந்­தது என்­ப­துடன்  வேக­மாக வாக­னத்தை செலுத்­து­வதையோ சந்­தே­கத்­தைத் தூண்டும் வகையில் நடந்­து­கொள்­வ­தை­யோ தவிர்த்து  பொது­மக்­க­ளோ,  பொலிஸாரோ சட்டம், ஒழுங்­கு­களை  கடைப்­பி­­டித்தால் இவ்­வா­றான சம்­ப­வங்­களை தவிர்க்கக் கூடி­ய­தாக இருக்கும்.