(ஆர்.வி.கே.)

யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் வடபகுதியெங்கும் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

சுன்னாகம் பகுதியில் வைத்து இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தே வடபகுதியெங்கும் ஹர்ததால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இக் ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே வடபகுதியெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. 

 பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்புநிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.