'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்' நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

08 May, 2022 | 02:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அலரிமாளிகையில் கூடவுள்ளனர்.

ரிஷாத்தை விடுதலை செய்யக் கோரி கல்குடா மக்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து 'பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நாளை காலை அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

பிரதமரின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன்,கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து உறுதியான தீர்மானம் எட்டப்படும்;.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பிரச்சினைகளுக்கு தீர்வு தான் பதவி விலகலை மையப்படுத்தியதாக அமையாது.பதவி விலகலை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக முன்வைத்துள்ள யோசனைகள் நடைமுறைக்கு பொறுத்தமாக அமையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்தாக அமையும்.

பிரதமர் பதவியில் இருந்து தான் ஒருபோதும் விலக போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் முக்கிய தரப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.சகல தரப்பினரது கருத்துக்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலின் போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள்  அலரிமாளிகையின் முன்பாக ' பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்'என்பதை முன்னிலைப்படுத்தி பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04