அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது  - ஜீவன் தொண்டமான்

07 May, 2022 | 10:42 PM
image

(செய்திப்பிரிவு)

அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. 

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த டுவிட்டர் பதிவில் , ' அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

வெள்ளியன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பினைப் பொறுத்த வரையில் அன்றைய தினம் சுமார் 5 - 10 மில்லியன் மக்களின் வரிப்பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஸ்திரமாகவுள்ளது. 

நாம் சுயாதீனமாகச் செயற்படுவது மக்களுக்கான முடிவை எடுப்பதற்காகும். நாம் மனசாட்சியின் பிரகாரம் செயற்பட்டுள்ளோம்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40