ஆனமடுவவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பாக இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தை ஏற்படுத்தியது தான் என கூறி மேலும் ஒரு நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் விற்பனை நிலையமொன்றில் பணிப்புரிந்து வந்த 42 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது குறித்த நபர் தனது பணி முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகனின் ஜீப் வண்டியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.