காலி முகத்திடல் போராட்டம் : பொலிஸாரின் முறைப்பாட்டை விசாரிக்க திகதி குறிப்பு

Published By: Digital Desk 4

06 May, 2022 | 07:19 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக   முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, பொது மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்தபப்டுவதாக  கூறி  பொலிஸார் முன் வைத்துள்ள முறைப்பாடொன்று  எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான்  முன்னிலையில் ஆராயப்படவுள்ளது. 

நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்  (PHOTOS) - தமிழ்வின்

வெள்ளிக்கிழமை (6) இந்த முறைப்பாட்டினை பரிசீலிக்க கொழும்பு மேலதிக நீதிவான்கலான ஹர்ஷ கெக்குனவல மற்றும் ஷிலினி பெரேரா ஆகியோர் விரும்பாத நிலையிலேயே, நீதிவான் ஷிலினி பெரேராவால் இவ்வாறு 10 ஆம் திகதிக்கு இது குறித்த விடயம் பிரதான நீதிவான் முன்னிலையில் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 இன்று முதல்,  காலி முகத்திடல் போராட்டத்துக்கு எதிராக உத்தரவொன்றினை பெற  கோட்டை பொலிஸார் அரச சட்டவாதி  சமீந்ர விக்ரமவுடன்  மேலதிக நீதிவான் ஹர்ஷ கெக்குனவல முன்னிலையில் ஆஜராகினர்.

 இதன்போது மன்றில்  விடயங்களை முன்வைத்த அரச சட்டவாதி சமீந்ர விக்ரம, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இரு மனுக்கள் நீதிமன்றம் முன்னிலையில் நிலுவையில் உள்ள நிலையில், அதில் ஒன்றை  பரிசீலனைக்கு எடுக்க நீதிவான் விரும்பினால் தான் தனது கோரிக்கையை முன்வைப்பதாக கூறினார்.

 எனினும் இதன்போது  மன்றில் சட்டத்தரணிகள் குழாம் ஒன்றுடன் ஆஜரான  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,  காலி முகத்திடல்  போராட்டம் தொடர்பில் பொலிசார் ஏதும் உத்தரவுகளைப் பெற முயன்றால், உத்தரவுகளை வழங்க முன்னர் ஏனைய தரப்பின் நியாயங்களுக்கும் மன்று செவிசாய்க்க வேண்டும் என அவர் கோரினார்.

 பொலிசார் ஒருதலைபட்சமாக உத்தரவுகளைப் பெற முயல்வது குறித்து அவதானிக்கப்படுவதால் அவ்வாறு கோருவதாக அவர் குறிப்பிட்டார்.

 இதனையடுத்து, இந்த விவகாரத்தை தான் பரிசீலிக்க விரும்பவில்லை என அறிவித்த மேலதிக நீதிவான் ஹர்ஷ கெக்குனவல, இன்றைய தினம் பிரதான நீதிவானாக பதில் கடமைகளை முன்னெடுத்த  நீதிவான் ஷிலனி பெரேராவுக்கு குறித்த மனுவை மாற்றினார்.

 இந் நிலையில் இந்த மனு நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. இதன்போது குறித்த மனுவை பரிசீலிக்க விரும்பாத மேலதிக நீதிவான் ஷிலனி பெரேராவும், இரு தரப்பின் ஒப்புதலுடன் பிரதான நீதிவான் முன்னிலையில் குறித்த மனுவை பரிசீலிப்பதற்காக விசாரணைகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32