அம்பாறை இறக்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

பாடசாலை வீதி இறக்காமம் 6, ஐச் சேர்ந்த எம். முஹம்மது பழீல் ஹாஜியார் (வயது 43) என்பவரே மரணமாகியுள்ளார்.

இவர் தனது வயலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கி மோட்டார் சைக்கிளின் அருகில் நின்று கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே மரணித்துள்ளார்.

கிழக்கில் கடந்த ஒரு சில நாட்களாக மாலை வேளையில் பெய்யும் மழையுடன் பலமான இடி மின்னலும் காணப்படுகின்றது.

-அப்துல் கையூம்