காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டத்திற்கும் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் - மனுவல் உதயச்சந்திரா

Published By: Digital Desk 3

06 May, 2022 | 04:24 PM
image

நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின்  போராட்டத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

பாராளுமன்ற சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணாமற்போனோர் அலுவலகத்தின் (OMP) அலுவலகம் வினைத்திறனாக செயற்படவில்லை என்பதனை ஆதாரபூர்வமாக விளக்கும் வகையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இவ்விடத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை  மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும்  எவ்வித  நியாயமான நீதியும் இன்றி தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

நீதிக்காக போராடிய 115 காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர் இறந்துள்ளனர்.அவர்களின் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இவ்வாறானதொரு  நிலையில் எந்த ஒரு  அரசாங்கமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது  உறவுகளோடு அக்கறையாக நடந்து கொள்ளவில்லை.

சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் உருவாக்கப்பட்ட நிலைமாறு கால  நீதியின் அங்கமாக  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் வந்த  போது பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசாங்கத்தின் மேல்  நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இவ் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் அழிக்கவில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்தனர். 

ஆனால் இவ் அலுவலகத்திலோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக பிரதேச செயலகங்களில் வழங்கப்படுகின்ற சான்றிதழினால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் தற்போதை OMP அலுவலகத்தின் முக்கிய பதவியில் உள்ளவர் பதவி விலகலை அறிவித்துள்ளார்.

ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். அவ்வாறான பதவியில் உள்ளவர்கள் OMP அலுவலகத்தில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை எனவும் நீதி அமைச்சின்  தலையீடுகள் அதிகம் எனவும் போதிய நிதி ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு அர்ப்பணிப்போ இல்லை.

இவ் அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்ய முடியாதுள்ளது. அவர் சுட்டிக்காட்டி இருப்பது OMP அலுவலகத்தின் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை காலமும் ஆமை வேகத்தில் இயங்கி விட்டு சர்வதேசத்திடம் இவ் அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அரசாங்கம் தன் வழமையான பொய்யான அறிக்கைகளை சர்வதேசத்திடம் வழங்கி வருகின்றமை, இந்த மக்களின் எதிர்பார்ப்பு மேலும் மழுங்கடிப்பதாகவே உணர்கின்றோம்

நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின்  போராட்டத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

பாராளுமன்ற சட்ட மூலகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட OMP அலுவலகம் வினைத்திறனாக செயற்படவில்லை என்பதனை ஆதார பூர்வமாக விளக்கும் வகையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இவ்விடத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணமே உள்ளனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும் வரை நீதிக்கான பயணத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08