நோர்வூட் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஒளிவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்குழு முறைபாடு செய்துள்ளது.

ஹட்டன் நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து குறித்த சொக்கலேட்டுக்கள் கொள்ளவனவு செய்யப்பட்டுள்ளன. 

இவற்றை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் போதுஇ இவ்வாறு புழுக்கள் இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடை தொகுதியை சோதனை செய்யும் பொழுது குறித்த கடையில் இருந்த ஏனைய சொக்லேட்களையும் கைப்பற்றியதோடு மேற்படி சொக்லேட் கம்பனி நிர்வாகத்திற்கும், கடை உரிமையாளர்க்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.