பெரும்பான்மை இல்லை என்பதை பிரதி சபாநாயகரைப் பயன்படுத்தி அரசாங்கம் மறைத்துள்ளது - கம்மன்பில

Published By: Digital Desk 4

05 May, 2022 | 10:05 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எம்மால் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரின் பின்னால் ஒழிந்து கொண்டு , அரசாங்கம் அதற்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை மறைத்துள்ளது.

இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பங்காளிக் கட்சிகளின் யோசனைக்கு அரசாங்கம் முக்கியத்துவமளிக்குமென  எதிர்பார்க்கிறோம் - கம்மன்பில | Virakesari.lk

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (5) கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது பிரதி சபாநாயகர் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து தெளிவுபடுத்தும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமக்கு பெரும்பான்மை இல்லை என்பதை பிரதி சபாநாயகர் விவகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மறைத்துள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது.

அதே போன்று அரசாங்கம் இவ்வாறான சூழ்ச்சிகள் ஊடாக தமக்கு பலம் இருப்பதாக காண்பிக்க முயற்சித்தாலும் , மக்களை அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு அரசாங்கம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் நாட்டை நிர்வகிப்பதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஐக்கிய மக்கள் முன்வைக்க வேண்டும்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது ஆதரவு வேண்டுமெனில் ஒன்றி சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்க வேண்டும்.

இந்த இரு தெரிவுகளில் எதனை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதைக் கேட்டு சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கு அவர் துரித பதிலை வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04