தெல்தோட்ட பிரதேசத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் தாக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் என்ற ஆசிரியர் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

குறித்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.