எதிர்தரப்பினரது செயற்பாடு ஒரு காட்டிக்கொடுப்பு -  பிரதி சபாநாயகர்  ரஞ்சித் சியம்பலாபிடிய

Published By: Digital Desk 4

05 May, 2022 | 02:41 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானத்திற்கு இன்று காலை வரை சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்த வேளை இறுதி தருணத்தில் அத்தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது. எதிர்தரப்பினரது செயற்பாடு ஒரு காட்டிக்கொடுப்பு என்றே கருதுகிறேன் என புதிய பிரதி சபாநாயகர்  ரஞ்சித் சியம்பலாபிடிய சபையில் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை ; அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து  செயற்படவே எதிர்பார்த்துள்ளோம் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.

பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தின் பதவியல்லாத போதும் சுதந்திர கட்சியினரது அரசியல் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக  பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினேன். புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சிறந்த முறையில் இடம்பெற்றது. எனக்கு ஆதரவாக வாக்களித்த சகல தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்டது. இன்றுகாலை வரை அத்தீர்மானம் மாற்றமடையவில்லை. ஆனால் இறுதி தருணத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பிரதி சபாநாயகர் பதவி ஊடாக எதிர்க்கட்சியினரது பலத்தை ஒன்றினைந்து உறுதிப்படுத்த எதிர்பார்த்தோம். இருப்பினும் எதிர்ககட்சியினரது தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டமை ஒரு காட்டிக்கொடுப்பாக கருதுகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08