கருத்துச் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைகளை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

Published By: Digital Desk 4

05 May, 2022 | 02:08 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Articles Tagged Under: சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk

மனித உரிமைகளை அமைதியான முறையில் செயல்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

போராட்டக்காரர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யவும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தமது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் , நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும் அவர்களுடன் பேசவும் உரிமை உண்டு.

மனித உரிமைகளை அமைதியான முறையில் செயல்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும்.

இலங்கை அதிகாரிகள் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை மதிக்க வேண்டும். அவற்றை பாதுகாக்க வேண்டும்.

ஊக்குவிக்க வேண்டும் , நிறைவேற்ற வேண்டும். மேலும் மக்கள் தங்கள் மனித உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மனித உரிமைகள் மீது சுமத்தப்படும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் சட்டத்தால் மாத்திரமே வழங்கப்பட வேண்டும்.

இந்த கைதுகள் தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும் என்பது சந்தேகத்திற்கிடமற்றது. அண்மையில் மிரிஹானை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் , பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மோசமாக நடத்தப்பட்டனர்.

அத்தோடு அவர்களுக்கு சட்ட ஆலோசகரை அணுகவும் அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கும் அதே உரிமை மீறல்களை அதிகாரிகள் செய்யாமல் இருப்பது மிகவும் முக்கியமானது.

அதிகப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்துதல், அச்சுறுத்துதல் மற்றும் சட்டவிரோதக் கைதுகள் ஆகியவை கருத்து முரண்பாடு மற்றும் அமைதியான ஒன்றுகூடலுக்கு இலங்கை அதிகாரிகள் பதிலளிக்கும் ஒரு வடிவமாகத் தெரிகிறது.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இலங்கையின் கடமைகளை தெளிவாக பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10