இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிறப்பித்துள்ளார்.

நிசாந்த ரணதுங்க ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அருன டி சில்வாவை  மிரட்டியதாக கூறப்படும் வழக்கொன்று தொடர்பிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.