விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!

Published By: Robert

24 Oct, 2016 | 01:43 PM
image

மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரு பெண்கள் உட்பட 7 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். 

மேலும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் சிவகீதா மற்றும் அவரது கணவரும் கைதாகினர். 

இந்தநிலையில் நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட 5 பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இதேவேளை, இன்று காலை முன்னாள் முதல்வர் சிவகீதா உட்பட 3 பெண்களும் ஒரு ஆணும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராசா உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

- சசி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06