போராட்டங்கள் பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 5

04 May, 2022 | 09:29 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்டகாரர்களில் ஒரு தரப்பினர் முயற்சித்ததை  தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  

Slash salaries to support daily wage earners, Prasanna Ranatunga proposes  to President | Daily FT

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அதற்கு இடமளிக்க முடியாது.

என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ஒருதரப்பினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் கூற்றுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறு கட்சி தலைவர் கூட்டத்தின் போது சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ஒருதரப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கூச்சலிட்டதுடன் ,பாராளுமன்ற உறுபபினர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

கைது தொடர்பில் பொலிஸ் தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அறிக்கைக்கு சபைக்கு சமர்ப்பிப்பேன்.

ஆகவே எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பான வகையில் சபையில் கருத்துரைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41