அலரிமாளிகைக்கு அருகிலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் உடைமைகள், வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு 

Published By: Digital Desk 4

04 May, 2022 | 05:04 PM
image

கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அலரிமாளிகை முன் இருந்த கூடாரம் பொலிசாரால் அகற்றப்பட்டது! - Zee Lanka

 நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதிப் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யவில்லை என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்  மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், போராட்டக்காரர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்து குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43