மருதமுனை விஜிலியின் 'இரண்டாவது தெருவின் நிழல்' கவிதை நூல் வெளியீடு

Published By: Nanthini

04 May, 2022 | 05:37 PM
image

ம்பாறை மாவட்ட தமிழ்மொழி நூலாசிரியர்கள் பேரவையின் ஏற்பாட்டில் மருதமுனை விஜிலி ஆசிரியர் எழுதிய 'இரண்டாவது தெருவின் நிழல்' கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்திய கலாநிதியும் எழுத்தாளருமான டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் விஜிலியிடமிருந்து பெற்றார்.

விமர்சகர் அப்துல் றஸ்ஸாக், பாவேந்தல் பாலமுனை பாறூக், ஊடகவியலாளரும் விமர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். தென்றல் எப்.எம். அறிவிப்பாளர் எஸ்.எல்.எம். றிலா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

கவிஞர் எம்.பி. அபுல் ஹஸன் தலைமையுரையில்...

இலக்கியப் படைப்புக்கள் அதிகம் வெளிவருகிற இக்காலகட்டத்தில் சமூகப் பிரச்சினைகளும் அதிகமாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கவிஞர் விஜிலியின் 'இரண்டாவது தெருவின் நிழல்' கவிதை நூல் பல சம்பவங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

'மூதாட்டியின் வாக்குமூலம்' என்ற கவிதையில்
எனது ஊன்றுகோல்
பூமியை தடவுகின்ற போதெல்லாம்
மனிதாபிமானம்
செத்துக்கொண்டிருக்கின்றது
என்ற வரிகள் 'சிரிக்கத் தெரிந்த பாரசீகர்கள்' என்ற பாடப்புத்தகக் கவி வரிகளை ஞாபகப்படுத்துகின்றன.

விமர்சகர் அப்துல் றஸ்ஸாக் உரையில்...

"இந்நூலில் முக்கியமாக நான்கு அவலங்கள் தென்படுகின்றன. முதலாவது, சொற்களின் தனித்துவமும் மறுவாசிப்பும். 'நிழல் காலடி', 'சிலுசிலுத்த மழை', 'நிலவு', 'மண்', 'இருள்', 'காலம்' போன்ற கவிதைகளில் இச்சொற்களுக்கான அர்த்த வேறுபாடு மாறிக்கொண்டே இருக்கின்றன.

இரண்டாவது பழமை, நாட்டாரியல் பண்புகளை நவீன கவிதைச் செயற்பாட்டில் கலந்து எழுதுதல். 'புதைக்கப்பட்ட ரம்மியம்' கவிதையில் இலைகறி விற்பவளை தேடுதல், 'மணல் வாரி'யில் முருங்கைக்காய் பற்றிய சித்திரம், 'அடல் அலைக்குள் அகப்பட்ட' கவிதையில் ஆணலை, பெண்ணலை பற்றிய சித்திரிப்புக்கள் இவ்வகையானவை.

மூன்றாவது, மனிதன்... மனித வாழ்வு, தற்கால மனித இழிவு போன்ற அம்சங்களை இவரது கவிதைகள் பாடுபொருளாக கொண்டுள்ளன. 'அடுத்த நூற்றாண்டு மனிதன்' போன்ற கவிதைகளில் இப்பொருள்களின் விரிவுபட்ட தன்மையினை காணலாம்.

நான்காவது... விஜிலி தனது கவிதை பற்றிய அரசியல் நிலைப்பாடுகளை பல்வேறு விதத்தில் எடுத்துரைக்கிறார். இதில் தனது கவிதைகளை வகைப்படுத்த பார்க்கிறார். ஒரு வகையில் இது சுயவிமர்சனமே ஆகும்" என தெரிவித்தார்.

- பி.எம்.எம்.ஏ.காதர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56