மாதுளம் பூவின் நன்மைகள்

Published By: Devika

04 May, 2022 | 02:59 PM
image

மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

மாதுளம் பழத்தைப் போலவே மாதுளம் பூவிலும் இரும்புச்சத்து, கல்சியம், பொஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் இரத்த விருத்தி அடையும். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம்.

மாதுளம் பூக்களை உலர்த்திய பின்னர் பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாட்களில் இருமல் குறையும்.

மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் சரியாகும்.

பெண்களுக்கு கருப்பை வலுவடைய மாதுளம் பூ சாறு சாப்பிடலாம்.

மாதுளம் பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப் புண், வயிற்றுபுண் உள்ளிட்டவை சரியாகும்.

மாதுளம் பூவை தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி தீரும். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் உடலை குளிர்ச்சி அடையச் செய்ய மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டு வரலாம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04