யாழ். பல்கலை மாணவர்களின் மரணம் தொடர்பில் நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி யாழ். பல்கலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் ஏ 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறயினும் வீதியை மறித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டுள்ளது.

யாழ் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.