இன்றைய பாராளுமன்ற அமர்வு : 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லையாம் !

04 May, 2022 | 11:53 AM
image

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. சபாநாயகர் தலைமையில் இந்த அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

இதில் பொருளாதார நெருக்கடி குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பான விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் வேதனத்திற்காக மாத்திரம் 845 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறான செலவினமானது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை காட்டிலும், அதிகமாகும்.

அதேநேரம், 1956ஆம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ஆம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம்.

அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு தற்போது பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை உடனடியாக தடுத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமைக்கு சீனா ஆரம்பத்தில் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. எனினும், நேற்று முன்தினம் சீனாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், அந்த நிலைப்பாடு மாற்றம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை செல்லும் என நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, இதன் பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ,

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாட்டை கட்டியெழுப்ப இயலாது என எதிர்க்கட்சி தலைவர் சபையில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59