இலங்கை ரக்பி சம்மேளன தேர்தலுக்கான குழு இவ்வாரம் நியமனம் - அமல் எதிரிசூரிய

Published By: Digital Desk 5

05 May, 2022 | 09:58 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை  ரக்பி சம்மேளனத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கான புதிய தேர்தலுக்கான குழுவொன்று இவ்வாரத்தில் நியமிக்கவுள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

"ஆசிய ரக்பி சம்மேளனத்தின் உபகுழு கூட்டத்தில் இலங்கை ரக்பி அங்கத்துவத்தை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பிரதிநிதியொருவர் கடந்த 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

இதன்போது, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரிவினரை சந்தித்து  பேசி ஆசிய ரக்பி சம்மேளன பிரதிநிதி புதிய தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து தேர்தல் தொடர்பான தகவல்களை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்குதல் மற்றும் வெளிப்படைத் தன்மையான தேர்தலொன்றை நடத்துவதற்காக ஆசிய மற்றும் உலக ரக்பி சம்மேளனத்தின் கண்காணிப்பு மையமொன்றை நிறுவுவதற்கும்  ஆசிய ரக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தேர்தல் குழுவை நியமிப்பதற்கான செயற்பாடுகள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. 

இதனை இவ்வாரத்திற்குள் நியமிப்பதற்கு முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

விரைவில் தேர்தலை நடத்த வேண்டும். 

இது சம்பந்தமாக தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் ” என்றார்.

நியாயத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்தி புதிய தேர்தலை நடத்தி முடிக்கும் வரையில், ஆசிய ரக்பி சம்மேளனத்தினால் இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை முடிவடையும் வரை, தேசிய அல்லது விளையாட்டுக் கழக மட்ட போட்டிகளில் இலங்கை பங்கேற்க அனுமதிக்கப்படாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 19:29:58
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43