மது விற்பனைக்கு தடை: பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.!

Published By: Robert

24 Oct, 2016 | 11:42 AM
image

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. இங்கு ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பாராளுமன்றத்தில் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் இத்தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இத்தடையை மீறுபவர்களுக்கு (25 மில்லியன் ஈராக் தினார் (ரூ.15 இலட்சம்) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு எத்தனை எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொதுவாக ஈராக்கில் பெரிய நகரங்களில் கிறிஸ்தவர்களால் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஷியா பிரிவினரின் புனித முகரம் மாதம் என்பதால் அவை மூடப்பட்டுள்ளன. இந்த விடுமுறை முடிந்த பிறகு தான் மதுபான கடைகள் தடை விவகாரம் குறித்து முழுமையாக தெரியவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10