சீனாவுடனான பேச்சுக்கள் சாதகமாக முன்னெடுப்பு : தொடர் ஒத்துழைப்புக்கு இந்தியாவுடனும் பேச்சு - அரசாங்கம்

Published By: Digital Desk 3

03 May, 2022 | 10:08 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் சீனாவின் சாதகமான நிலைப்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அரசாங்கம், நட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவிடமிருந்து மேலும் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (3) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலககொடஹேவா தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பிற்கு இணக்கமற்ற வகையில் அண்மையில் சீனா அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. இவ்விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் அது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள உதவியிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

எனவே அரசாங்கம் இதுகுறித்து சீனாவிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதா எனவும், இந்திய கடன் திட்டத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எந்தவொரு காரணத்திற்காகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுமே அன்றி , இடை நிறுத்தப்பட மாட்டாது. அதனை இடை நிறுத்தும் வகையிலான எந்தவொரு இரகசிய பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த ஏனைய நாடுகளின் விவகாரங்களிலும் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா பெரிதளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை. 

எனினும் அவர்கள் முழுமையாக அதற்கான வாய்ப்பினை வழங்காமலும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து சில நாடுகளுக்கு கடன் மறுசீரமைப்பிறகு உதவியுள்ளது.

அதனடிப்படையில் நேற்றும் (திங்கட்கிழமை) நிதி அமைச்சர் சீன தூதுவரை சந்தித்து இது குறித்து கலந்துரையாடியுள்ளார். 

தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த பிரதிபலிப்பு தென்படுகிறது. எனவே கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா எம்முடன் இணக்கப்பாட்டுடன் செயற்படும் என்று நம்புகின்றோம்.

அத்தோடு அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலும் இதற்கான சிறந்த அடித்தளம் இடப்பட்டுள்ளது. 

இந்தியா இதுவரையில் வழங்கியுள்ள கடன் தொகைக்கு மேலதிகமாக மேலுமொரு கடன் தொகையை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆரம்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38