மட்­டக்­க­ளப்பு நகரில் சிகை அலங்­கார நிலை­யங்கள் என்ற பெயரில் மாண­வி­களை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்தி வரு­வது தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு மட்­டக்­களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு நகர் பகு­தியில் சிகை அலங்­கார நிலை­யங்கள் என்ற போர்­வையில் சில இடங்­களில் பாட­சாலை மாண­வி­களை பயன்­ப­டுத்தி விப­சார நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக மாண­வர்கள் பெற்றோர் மத்­தி­யி­லி­ருந்து கிடைத்த முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மாவட்­டத்தில் கலா­சார சீர­ழி­வுக்கு இட­ம­ளிக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­யெ­டுக்­கு­மாறும் இவ்­வா­றான கலா­சார சீரழிவு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.