தரமற்ற எரிபொருள் விநியோகம் : முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம்

Published By: Digital Desk 4

02 May, 2022 | 05:11 PM
image

தரமற்ற எரிபொருள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 0115 455 130 அல்லது 0115 234 234 ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைக் கலந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59