நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - ஆளுங்கட்சி

Published By: Digital Desk 3

03 May, 2022 | 09:33 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம்.

உரிய நேரத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றில் குறிப்பிட்டார்கள்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உரிய எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எதிர்தரப்பினர் முன்னெடுக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகங்களில் மாத்திரம் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவ்வாரம் பாராளுமன்றில் கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணையை எம்மால் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ள முடியும்.

ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை உரிய நேரத்தில் நிரூபிப்போம். பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதையும் உறுதியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். 

எவ்வாறான குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டு வரப்படும் என்பது குறித்து எதிர்தரப்பினர் முதலில் தெளிவுப்பெற வேண்டும். அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:24:43
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04