பிலிப்பைன்ஸில் தீ விபத்து ; குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

Published By: Digital Desk 3

02 May, 2022 | 11:41 AM
image

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 05:00 மணியளவில் ஆரம்பித்த  இந்த தீ விபத்தில் , 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ விபத்து கியூசான் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் ஒரு நெரிசலான குடியிருப்பு தொகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

A fire ripped through a poor community in Manila, the Philippines

தீ விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.

தீயை அணைக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகியதாக தீயணைப்பு அதிகாரி கிரெக் பிச்சாய்டா தெரிவித்துள்ளார்.

தீ வேகமாக பரவியதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. 

பிலிப்பைன்ஸ் உலகின் மிக அதிக சனத் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் அதன் தலைநகரில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.

மெட்ரோ நகரமான மணிலா, தலைநகரை உள்ளடக்கிய பகுதி மற்றும் கியூசான் உட்பட மற்ற நகரங்களில் சுமார் 1 கோடியே 3 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இவ்வாறு தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படும் நெரிசலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47