6 ஓட்டங்களால் டெல்ஹியை வீழ்த்தியது லக்னோ

Published By: Digital Desk 5

02 May, 2022 | 11:07 AM
image

(என்.வீ.ஏ.)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸுக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கும் இடையில் மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐ பி எல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் லக்னோ வெற்றிபெற்றது.

K Gowtham reacts after dismissing Mithcell Marsh, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

இந்த வெற்றியுடன் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை ஈட்டியுள்ள  லக்னோ  14 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 2 இடத்தை அடைந்துள்ளது.

அணித் தலைவர் கே. எல். ராகுல், தீப்பக் ஹூடா ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் மோஷின் கானின் 4 விக்கெட் குவியலும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸின்   வெற்றியில் பிரதான பங்காற்றின.

Marcus Stoinis wears a dejected look, getting rid of Prithvi Shaw, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான குவின்டன் டி கொக், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் 26 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்த்திருந்தபோது ஷர்துல் தக்கூரின் பந்துவீச்சில் டி கொக் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Rovman Powell whacks one over the mid wicket boundary, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

அதன் பின்னர் ராகுல், ஹூடா ஆகிய இருவரும் மிக அருமையாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை மிக இலகுவாக பெற்றவண்ணம் இருந்தனர். அவர்கள் துடுப்பெடுத்தாடிய விதத்துக்கு அமைய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் கணிசமான மொத்த ஓட்டங்களைப்     பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இருவரும் 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஹூடாவின் விக்கெட்டை தக்கூர் கைப்பற்றினார். ஹூடா 34 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

Rishabh Pant was bowled by Mohsin Khan for 44, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

மொத்த எண்ணிக்கை 176 ஓட்டங்களாக இருந்தபோது மீண்டும் தக்கூரின் பந்துவீச்சில் ராகுல் களம் விட்டகன்றார்.

ராகுல் 51 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகளுடன் 77 ஓட்டங்களைக் குவித்தார்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 11 ஓட்டங்களுடனும் க்ருணல் பாண்டியா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்துவீச்சில் ஷர்துல் தக்கூர் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Mohsin Khan celebrates the wicket of Shardul Thakur, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அதிரடி ஆரம்ப வீரர்களில் ஒருவரான ப்ரித்வி ஷாவை (5) துஷ்மன்த சமீரவும் மற்றைய அதிரடி வீரர் டெவிட் வோர்னரை (3) மோஷின் கானும் ஆட்டமிழக்கச் செய்தனர். (13 - 2 விக்.)

எனினும் மிச்செல் மார்ஷ், ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

மார்ஷ் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கௌதமின் பந்தவீச்சில் ஆடுகளம் விட்டகன்றார்.

Super Giants celebrate a wicket, Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022, Wankhede Stadium, Mumbai, May 1, 2022

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 13 ஓட்டங்கள் சேர்ந்தபோது லலித் யாதவ்வின் (3) விக்கெட்டை ரவி பிஷோனி வீழ்த்தினார்.

மொத்த எண்ணிக்கை 120 ஓட்டங்களாக இருந்தபோது ரிஷாப் பன்டின் (44) விக்கெட்டை மோஷின் கான் நேரடியாகப் பதம் பார்த்தார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரோவ்மன் பவல் (21 பந்துகளில் 35), ஷர்துல் தக்கூர் (1) ஆகியோரின் விக்கெட்களையும் மோஷின்  கான் கைப்பற்றினார்.

அக்ஸார் பட்டேல் 24 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 42 ஓட்டங்களுடனும் குல்தீப் யாதவ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மோஷின் கான் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35