வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை - நிதி அமைச்சர்

Published By: Digital Desk 5

30 Apr, 2022 | 09:26 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

iftamil - அலி சப்ரி எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை!

 அதனைத் தவிர வேறு மாற்றுவழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வட் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானதாகும் என்று நிதி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்யக் கூடிய நிலைமையிலுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி வீதம் எந்தளவிலும் போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதற்கமைய வட் வரி வீதத்தினை நூற்றுக்கு 13 - 14 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக சுமார் 4 பில்லியன் டொலருக்கும் அதிக நிதி தேவையாகவுள்ளது. 

அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50