மிஷ்கினின் 'பிசாசு 2' டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

30 Apr, 2022 | 02:00 PM
image

நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பிசாசு2' படத்தின் டீசர் வெளியானது.

'சைக்கோ' படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பிசாசு 2'. இதில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார். 

அவருடன் அச்சு மணி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி விரிவுபடுத்தப்பட்ட குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். 

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.  

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 இந்த டீஸரை தமிழில் எஸ் ஜே சூர்யாவும், மலையாளத்தில் நடிகைமஞ்சு வாரியரும் வெளியிட்டனர். 

2014ஆம் ஆண்டில் வெளியான 'பிசாசு' படத்தின் முதல் பாகத்தில் ஆவியை நேர்மறையாக சித்தரித்த இயக்குநர் மிஷ்கின், 'பிசாசு 2' படத்திலும் வித்தியாசமாகவே சித்தரித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 இருப்பினும் டீஸரில் ஒரு பெண்ணின் நிர்வாண ஓவியம், விஜயசேதுபதியின் குயவன் கதாபாத்திரம் போன்றவை 'பிசாசு 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35