மட்டக்களப்பு இசை நடன கல்லூரிக்கு முன் மாணவர்கள் போராட்டம்

29 Apr, 2022 | 09:08 PM
image

மட்டக்களப்பு இசை நடன கல்லூரிக்கு முன்பாக மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் குறித்த பகுதியில்  மாணவர்களினால் தங்களது மாணவர் சங்கம் அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றதாகவும் அந்த கூட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விரிவுரையாளர் ஒருவர் குறித்த கூட்டத்தை நடத்த வேண்டாம் என கூறியதாகவும் அதனால் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த  போது  குறித்த  விரிவுரையாளர் மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் காரணமாக இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதன் காரணமாக தற்பொழுது விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தினை மூடி குறித்த நிர்வாகத்திலிருந்து விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப்பாளர் ஆகியோர் வெளியேற முடியாதவாறு  தற்பொழுது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காத்தான்குடி பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அது பயனளிக்கவில்லை.

தாக்கியவர்களை கைது செய்யும் வரைக்கும் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி குறித்த பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35