5 விக்கெட்டு குவியலை கைப்பற்றியும் தோல்வியைத் தழுவிய மற்றுமொரு சந்தர்ப்பம்

Published By: Digital Desk 5

30 Apr, 2022 | 10:33 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அடைந்த தோல்வியானது, ஐ.பி.எல். அரங்கில் பந்துவீச்சாள‍ரொருவர் 5 அல்லது 5 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்தும் தோல்வியைத் தழுவிய 8 ஆவது சந்தர்ப்பமாக பதிவானது.

15 ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடரின் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணி குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோல்வியடைந்துவிடும் என்ற நிலையில் இருந்தபோது ரஷீட் கான், ராகுல் திவாட்டியா ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி இறுதிப்பந்தில் அதிர்ச்சிகரமான வெற்றியை ஈட்டியது. 

அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை குவித்து 4 விக்கெட்டுகளால் வெற்றி அடைந்தது. 

இதில் ஐதராபத் அணியின் உம்ரன் மாலிக் மின்னல் வேகத்தில் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்த போதிலும் தோல்வியைத் தழுவியது. 

இவ்வாறு ஐ.பி.எல். அரங்கில் பந்துவீச்சாளரொருவர் 5 விக்கெட்டுக்கள் அல்லது அதற்கு மேற்பட் விக்கெட்டுக்களை வீழ்த்தி தோல்வியைத் தழுவிய 8 ஆவது சந்தர்ப்பமாக இந்த தோல்வி அமைந்தது.

இதற்கு முன்னர் 2011 இல் முனாப் பட்டேல், 2012 இல் சுனில் நரைன், 2013 இல் ஜேம்ஸ் போல்க்னர், 2016 இல் அடம் ஸம்பா, 2018 இல் அங்கித் ராஜ்புத், 2021 இல் அண்ட்ரே  ரசல் மற்றும் ரசல் மற்றும்  அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றியபோதிலும் தத்தமது அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41