குழந்தைக்கு தாய்,தந்தை இருவரின் பெயர்களும் இடப்பட வேண்டும் - இத்தாலிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

29 Apr, 2022 | 10:50 AM
image

இத்தாலி நாட்டின் அரசியல்அமைப்பு நீதிமன்றம் பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசியல் அமைப்பு  நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி பாராளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“இந்த முடிவுக்கு நாம் ஒரு பொருளைத்தர வேண்டும். இது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. அதை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையும், தாயும் சம பங்கு எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52