பெயார்ப்ரேக் அழைப்பு மகளிர் டி20 கிரிக்கெட்டில் இரு இலங்கை வீராங்கனைகள்

Published By: Digital Desk 4

28 Apr, 2022 | 10:38 PM
image

(என்.வீ.ஏ.)

துபாயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெயார்ப்ரேக் அழைப்பு 2022 (FairBreak Invitational 2022)   இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தப்பத்து, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உதேஷிகா ப்ரபோதனி ஆகிய இருவரும் விளையாட ஒப்பந்தமாகியள்ளனர்.

சுஸி பேட்ஸ் (நியூஸிலாந்து), டெனில் வைட் (இங்கிலாந்து), மாரிஸ்ஆன் கெப் (தென் ஆபிரிக்கா) பொன்ற பிரபல வீராங்கனைகளுடன் பெல்கன்ஸ் அணிக்காக சமரி அத்தப்பத்து விளையாடவுள்ளார்.

சமரி அத்தப்பத்து 89 மகளிர் சர்வதேச இருபது 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் தொழில்சார் மகளிர் இருபது 20 கிரிக்கெட் பொட்டிகளில் விளையாடிய அனுபசாலி ஆவார்.

உதேஷிகா ப்ரபோதனி இந்த சுற்றுப் போட்டியில் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இத்தகைய தொழில்சார் கிரிக்கெட் போட்டியில் ப்ரபோதனி விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.

36 வயது நிரம்பிய ப்ரபோதனி 75 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டி

பெயார்ப்ரேக் இன்விட்டேஷனல் 2022 (அழைப்பு கிரிக்கெட்) மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஆறு அணிகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டி துபாயில் தொழிலாளர் தினத்தன்று ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக தனியார்  நிறுவனம்  அனுசரணை வழங்கும் இந்த சுற்றுப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

ஜென்கோர் என்ற நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கும் இப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.

6 அணிகள் 15 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்று முடிவடைந்ததும் அணிகள் நிலையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09