'#கோ கோம் கோட்டா 2022' முகப்புத்தக பக்க நிர்வாகியின் பயணத் தடை நீக்கம் !

Published By: Digital Desk 4

28 Apr, 2022 | 09:58 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சமூக ஊடக செயற்பாட்டாளரும் '#GoHomeGota2022' எனும் முகப்புத்தக பக்கத்தின் நிர்வாகியுமான  திசர அனுரத்த பண்டாரவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

 அண்மையில்  மிரிஹானையில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகே இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஏப்ரல்  2 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும்  அரசு தொடர்பில்  பொது மக்களிடையே  விரோதத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதாக கூறி  திசர அனுரத்த பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 குறித்த பிணை நிபந்தனைகளில் ஒன்றாக அவரது வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டது.

 இந் நிலையில் இந்த விவகாரம் குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதிவான்  கேமிந்த பெரேரா முன்னிலையில் மீள விசாரணைக்கு வந்தது. இதன்போது அனுரத்த பண்டாரவுக்காக ஆஜரான சட்டத்தரணியின் கோரிக்கையை பரிசீலித்து, நீதிவான் வெளிநாட்டு பயணத் தடையை நீக்கினார்.

 இது குறித்த வழக்கு  மீள மே 31 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58