ராஜபக்ஷாக்கள் மக்கள் ஆணையால் பதவி விலக்கப்படுவர் - சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 4

28 Apr, 2022 | 09:36 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை ஸ்தாபிக்க எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷாக்கள் மக்கள் ஆணையால் பதவி விலக்கப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

May be an image of one or more people, people standing, road and crowd

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பு பேரணியின் மூன்றாம் நாள் வியாழக்கிழமை (28) கலிகமுவையில் ஆரம்பமானது.

இதன் போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ராஜபக்ஷ குடும்பம் 30 மாதங்களுக்குள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளது.   தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள் மற்றும் நிதி என்பவற்றை கொள்ளையடித்ததன்  காரணமாகவே நாடு இவ்வாறு வக்குரோத்தடைந்துள்ளது.

ஊழலையும் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை ஸ்தாபிக்க எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அரசியலமைப்பின் ஊடாக ஸ்திரமானதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கொள்ளையர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும்.

எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது. மக்களின் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கும் பொறுப்பு, முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த இரகசிய ஒப்பந்தமும் இல்லை. நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே எமது ஒப்பந்தம்.

நாட்டை குறுகிய காலத்திற்குள் வங்குரோத்தடையச் செய்துள்ள ராஜபக்ஷக்கள் மக்களை ஆணையுடனேயே பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த பேரணி வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் , நாளைமறுதினம் சனிக்கிழமை யக்கலையிலிருந்து பேலியகொடையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11