ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் பேசி தீர்மானிக்கப்படும் - சுதந்திர கட்சி

Published By: Digital Desk 3

28 Apr, 2022 | 09:26 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் 11 கட்சிகள் உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும். நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை நன்கு அறிந்துள்ள பிரதமர் அது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து 11 கட்சிகள் உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அந்த சந்திப்பில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். நாம் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே கலந்துரையாடி வருகின்றோம். இதன் போது பிரதமர் பதவி விலகுவாரா அல்லது அவரை ஜனாதிபதி பதவி விலக்குவாரா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்கப்பட வேண்டிய காரணியாகும்.

நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமர் நன்கு அறிவார். எனவே அவர் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இதே போன்று இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பயணிக்க முடியாது. 

எனவே தான் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறும் , அதில் அனைவரையும் பங்குபற்றுமாறும் கோருகின்றோம். எந்தவொரு கட்சிக்கும் இதனை தனித்து செய்ய முடியாது.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிலிருந்து விலகுபவர்களை மக்கள் நன்கு அறிவர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதை விட வேறு மாற்று வழியில்லை. ராஜபக்ஷக்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்பதே தற்போது நாட்டு மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

அத்தோடு ஜனாதிபதியை பதவி விலக்க வேண்டுமாயின் அதற்கு முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் மிக நீண்ட வழிமுறைகளைக் கொண்டதாகும். 

ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நீண்ட காலம் செல்லும். எனவே நாட்டை மேலும் பள்ளத்தில் வீழ்த்துவதா அல்லது 21 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22