இருபதுக்கு 20 போட்டிக்காக இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ள இலங்கை அணி

Published By: Digital Desk 5

27 Apr, 2022 | 12:40 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

சர்வ‍தேச கிரிக்கெட் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணமொன்றை   ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வளர்ந்துவரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட 4 நாட்கள் கிரிக்கெட்  போட்டித் தொடர் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக  வளர்ந்து வரும் இலங்கை  அணி எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளது.  

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 4 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. 

இதன் முதலாவது போட்டி கென்ட் பிராந்தியத்தின் கேன்டர்பரியில் மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இத்தொடரின் இரண்டாவது போட்டி மே 13 ஆம் திகதியன்று ஹேம்ப்ஷயாரிலும்,  மூன்றாவது போட்டி மே 20 ஆம் திகதியன்று சர்ரேவிலும் நடைபெறவுள்ளது. 

இப்போட்டித் தொடர் நிறைவடைந்ததன் பின்னர், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ‍மே 25 இல் நடைபெறும். 

இரண்டாவது போட்டி மே 27 இலும், மூன்றாவது போட்டி மே 29 இலும் நடத்தப்படும். 

DATE MATCH VENUE

06th to 09th May 2022 01st Four Day Canterbury - Kent

13th to 16th May 2022 02nd Four Day Ageas Bowl - Hampshire

20th to 23rd May 2022 03rd Four Day Guildford CC - Surrey

25th May 2022 01st T20 Kia Oval – Surrey

27th May 2022 02nd T20 The Cooper ACG - Somerset

29th May 2022 03rd T20 Bristol County Ground -Gloucestershire

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35